2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சவுக்கடி வீதி புனரமைப்பு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 19 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா


மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சவுக்கடி பிரதான வீதியில் புனரமைப்பின்றி காணப்பட்ட  200 மீற்றர் நீளமான  வீதி,  கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வியாழக்கிழமை (18) விடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்து 200 மீற்றர் நீளமான இந்த வீதி,  பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 20 இலட்சம் ரூபாய் விசேட ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு  மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X