2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நாவலடி, காயத்திரி ஆலயத்தில் மண்டலப் பெருவிழா

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 19 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக்குழு நடத்தும் மண்டலப் பெருவிழா, மட்டக்களப்பு நாவலடி, காயத்திரி ஆலயத்தில்  சனிக்கிழமை (20) நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழவினர் தெரிவித்தனர்.

காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு அபிஷேகப் பூசை, 10 மணிக்கு பஜனை, 12 மணிக்கு ஐயப்பனின் மண்டலப் பூசை என்பன நடைபெறவுள்ளன. 

இப்பூசைகள் யாவும் நாவலடி காயத்திரி ஆலய பிரதமகுரு சிவயோகச் செல்வன் சிவஸ்ரீ சாம்பசிவம் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெறவுள்ளன.

இதன்போது கொழும்பு மற்றும் பல பாகங்களிலும் இருந்து கலந்துகொள்ளும் ஐயப்ப சுவாமிமார்களின் பஜனை இடம்பெறும்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X