2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லையெனக் கூறி புளுக்குனாவை மக்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 19 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்


தங்களுக்கான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என்று கூறி மட்டக்களப்பு மாவட்டத்தின பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புளுக்குனாவைப் பகுதியில் வசிக்கும் பெரும்பான்மையின  மக்கள் மட்டக்களப்பு நகரில் இன்று வெள்ளிக்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசாரத்துக்காக  மட்டக்களப்புக்கு வருகை தரவிருக்கும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மேற்படி பகுதியில் தாம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதிலும்,  தமக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்துகொடுக்கப்படவில்லை. தங்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை.  பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் என்பவற்றில் தமது பதிவுகள் எதனையும் பெறமுடியாதுள்ளது. இந்த விடயங்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரும் முகமாகவே தாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X