2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. யின் நினைவுதினம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 26 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 09ஆவது வருட நினைவுதினம்  வியாழக்கிழமை (25)  அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் இந்த நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது, மறைந்த ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு தீபச்சுடர் ஏற்றப்பட்டதுடன்,  மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நினைவு உரைகள் ஆற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில்; உள்ள தேவாலயமொன்றில்  நத்தார் பண்டிகை  ஆராதனையின்போது, 2005ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 25ஆம் திகதி ஜோசப் பரராஜசிங்கம்  சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்;ளை, மா.நடராஜா, பிரசன்னா இந்திரகுமார் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X