2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சுனாமியினால் உயிர்நீத்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

Gavitha   / 2014 டிசெம்பர் 27 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ஜெயஸ்ரீராம்


சுனாமி அனர்த்தத்தினால் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பாசிக்குடா கடற்கரையில் வெள்ளிக்கிழமை (26) காலை நடைபெற்றது.

பாசிக்குடா வலம்புரி விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் உறவுகளை நினைத்து மத வழிபாட்டு நிகழ்வுகளை நடாத்தியதுடன், நினைவுச் சுடாரும் ஏற்றிவைத்தனர். நிகழ்வின் முடிவில் அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.

கடும் மழை காரணமாக பொது மக்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது. இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் ப.தவேந்திரன் கலந்து கொண்டார்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X