2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சமாதானத்தை கொண்டுவந்தமையால், அபிவிருத்திகளை மேற்கொள்ளமுடிந்தன: சுசில்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 31 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமாதானத்தை கொண்டுவந்தமையாலேயே, அபிவிருத்திகளை  மேற்கொள்ளமுடிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் தேர்தல் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை (30) மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'தொடர்ந்து சமாதானம் நீடித்து நிலைப்பதற்கும் இந்த மண்ணில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்யவேண்டும்.  அனைத்து சிறுபான்மைச் சமூகங்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து,  அவரை வெற்றி பெறச் செய்யவேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில், இங்குள்ள பிரதேசங்கள் மிகக் கூடுதலான அபிவிருத்திகளை  கண்டுள்ளன  என்பதை யாரும் மறக்கமுடியாது.

இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லும் ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்பதை  அனைவரும் ஏற்றுக்கொள்வர். அந்த வகையில், எதிர்வரும் 8ஆம் திகதி ஜனாதிபதியின் சின்னமான வெற்றிலை சின்னத்துக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யவேண்டும்' என்றார்,

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X