2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளப் பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு சீருடைகள்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 31 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில்  வெள்ளப் பாதிப்புக்குள்ளான  மாணவர்களில் முதற்கட்டமாக 2,000 மாணவர்களுக்கு இலவசமாக  பாடசாலை சீருடைகள் புதன்கிழமை (31) விநியோகிக்கப்பட்டன.

பல வீடுகள்  வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதால், மாணவர்களுக்கு  சீருடைகள் இல்லாதிருந்தன. இந்த நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்  மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய,  விசேட நிதியொதுக்கீட்டின் கீழ்  மாணவர்களுக்கு  சீருடைகள் விநியோகிக்கப்படுகின்றன.

வெல்லாவெளி; கலைமகள் வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள ஏனைய மாணவர்களுக்கும் தொடர்ந்து  இலவசமாக  சீருடை வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் தெரிவித்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X