2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 31 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா

எதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலின்போது கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளவர்களுக்கு பயிற்சிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தப்படுகின்ற நிலையில், பட்டிருப்புத்தொகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளவர்களுக்கான பயிற்சி களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் புதன்கிழமை (30) நடைபெற்றது.

தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் ஊடாக இந்த பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.  

இந்த பயிற்சிநெறியை மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் வி.ரமேஸ் ஆனந்தன், பட்டிருப்புத்தொகுதி இணைப்பாளர் எஸ்.கிருபானந்தசிவம் ஆகியோர் வழிநடத்தினர்.

தேர்தல் காலத்தின்போது வாக்களிப்பு நிலையங்களை கண்காணித்தல், வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறும் சம்பவங்களை அவதானிக்கும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூன்று தேர்தல் தொகுதிகளான கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகியவற்றில் தேர்தல் காலத்தில் 150 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் வி.ரமேஸ் ஆனந்தன் தெரிவித்தார்.

பட்டிருப்புத்தொகுதியில் 40 கண்காணிப்பாளர்களும் மட்டக்களப்பு தொகுதியில் 50 பேரும் கல்குடாத்தொகுதியில் 50 பேரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X