2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பராமரிப்பற்ற காணிகள், வீடு சுவீகரிப்பு

Gavitha   / 2015 ஜனவரி 03 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாநகரசபையின் அறிவுறுத்தல்களை மீறி, டெங்கு பரவுவதற்கு ஏதுவாக இருந்த இரு வெற்று வளவுகளுமு; ஒரு வீடும் வெள்ளிக்கிழமை (02) மட்டக்களப்பு மாநகர சபையினால் சுவீகரிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்துக்குக்குட்பட்ட வளவுகளும் வீடுமே இவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளன.

அதிகார் வீதி மற்றும் கோவிந்தன் வீதி ஆகிய மக்கள் வாழும் பிரதேசங்களில், மாநகர சபை ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் சென்ற குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்நடடிவக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த இடங்களின் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் வசிப்பதாகவும் பல வருடங்களாக பராமரிப்பற்று இக்காணிகள் காணப்படுவதால் டெங்கு நுளம்புகள் பரவி வருவதாகவும் மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார், மாநகர சுகாதார அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் இணைந்திருந்தனர்.




 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X