2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டன

Gavitha   / 2015 ஜனவரி 03 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூராக இருந்த பல கட்டாக்காலி மாடுகள்  வெள்ளிக்கிழமை (02) மாநகர சபை ஊழியர்களினால் பிடிக்கப்பட்டது.

மாநகர ஆணையாளர் எம்.உதயகுமாரின் பணிப்புரையின் பேரில்,  மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி, மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி உட்பட பல உள் வீதிகளிலும் இவ்வாறு அலைந்து திரிந்த மாடுகளே இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த கால்நடைகளினால் வீதிகளில் விபத்துக்கள் ஏற்படுவதுடன், தனியார் வீடுகளில்; உள்ள பயிர்ச்செய்கையும் நாசமாகுகின்றன.
கைப்பற்றப்பட்ட மாடுகள், மட்டக்களப்பு மாநகர சபை வாகன வளாகத்தில் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X