2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'கல்வி மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும்'

Kogilavani   / 2015 ஜனவரி 06 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


'மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற வறுமையை ஒழிப்பதாக இருந்தால் இந்த மாவட்டத்தில் கல்வி மறுமலர்ச்சியும் விழிப்புணர்வும் ஏற்பட வேண்டும்'என ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.

ஏறாவூர் சமூக ஆய்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் வறிய மாணவர்களுக்கு பொருளாதார மற்றும் உளவியல் ரீதியிலான உதவிகளைச் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை  அறபா வித்தியாலயத்தில் ஏறாவூர் சமூக ஆய்வு நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.அஷ்ரப் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த வறிய தமிழ் முஸ்லிம் மாணவர்கள் 100 பேருக்கு தலா 1300 ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'வறுமை என்பதை நாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்டு வாழக்கூடாது. வறுமையுடன் பிறப்பது நாம் செய்த தவறல்ல. ஆனால் வறுமையுடன் இறப்பது நாம் செய்யும் தவறுதான்.

நாம் வாழும்போது தொடர்ந்து எதிர்பார்ப்புடன் கையேந்தி வாழாமல் வறுமையில் இருந்து மீள்வதற்காக முயற்சி எடுக்க வேண்டும்.
வறுமையிலிருந்து மீள்வதற்கும் இனங்களுக்கிடையில் சகவாழ்வையும் சமாதானத்தையும் நிலைபெறச் செய்வதற்கும் வறுமைப்பட்ட மக்களிடத்தில் கல்வி மறுமலர்ச்சி ஏற்படுவது முக்கியம்.

இப்பொழுது கல்வி வளர்ச்சிக்காக அரசாங்கமும் பல்வேறு சமூக நிறுவனங்களும் பல்வேறு வகைப்பட்ட உதவிகளைச் செய்து வருகின்றார்கள்.

இதனை சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்தி வறிய மக்கள் கல்வியில் மறுமலர்ச்சி பெறவேண்டும்.

சுயதொழில்களைச் செய்து வருமானம் ஈட்டி சேமித்து தமது பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை வறுமைக்குள்ளான பிள்ளைகளின் பெற்றோர் அடைந்துகொள்ள வேண்டும்.

சமூக நலனோம்பு நிறுவனங்கள் இனங்களுக்கிடையில் இன ஐக்கியத்துக்காகவும் பாடுபட வேண்டும்.

அதனடிப்படையில் இந்த சமூக ஆய்வு நிறுவனம் வறிய தமிழ் மாணவர்களையும் பாகுபாடு காட்டாமல் இணைத்து வறிய மாணவர்களுக்கு பொருளாதார மற்றும் உளவியல் ரீதியிலான உதவிகளைச் செய்து வருவது பாராட்டுக்குரியது.

வறுமை ஒழிப்பும் கல்வி மறுமலர்ச்சியும் இன ஐக்கியமும் இந்தப் பிரதேசத்தில் ஒருங்கிணைந்த ரீதியில் செயற்படுத்தப்பட வேண்டும். இதுதான் உண்மையான நீடித்து நிலைக்கும் அபிவிருத்தியாக இருக்கும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X