2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 06 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜே.எப்.காமிலா  பேகம்

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஏற்பாட்டில் சிறு  தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் யோசனைகளை    உருவாக்குவதற்கான மூன்று நாள் பயிற்சிக் கருத்தரங்கு  கோறளைப்பற்று மத்தி பிரதேச  செயலகத்தில்  நடைபெற்றது.
சனிக்கிழமை (03) ஆரம்பமாகி திங்கட்கிழமைவரை (05)  நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில்,    20   பேர்   கலந்துகொண்டனர்.

ஒருவர்  தனது  தொழிலை  திட்டமிட்டவாறு     வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அடிப்படையான  தகுந்த தொழில்  யோசனைகளை   தெரிந்துகொள்ள  ஏதுவாக   தொழில்  யோசனை  உருவாக்கம்,  யோசனைகளில்  ஆய்வு, தொழில்  யோசனை  தெரிவு    என்ற  இந்த   விடயங்களை  அறிந்துகொள்ளும் வகையில்   பயிற்சியும்  வழங்கப்பட்டது.

'உங்கள்   வியாபாரத்தை  ஆரம்பித்தல்' மற்றும்    நிகழ்ச்சித்திட்டத்துக்குரிய   சேர்க்கையாக  'உங்கள்  தொழில்  யோசனைகளை  உருவாக்குதல்' என்ற   கையேடும் கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களுக்கு   வழங்கப்பட்டன.

இந்தக் கருத்தரங்கில் வளவாளர்களாக   அரியசுதன், விதாதாவள   உத்தியோகஸ்;தர்  எஸ்.ஏ.புர்கான்,  மனித வள   உத்தியோகஸ்தர்  எம்.பாசில்ஹ  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


 



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X