2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள் :ஹிஸ்புல்லாஹ்

Kanagaraj   / 2015 ஜனவரி 08 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வியாழக்கிழமை (08) காலை காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலய வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், 'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவார்.

மக்கள் பொய் பிரசாரங்களுக்கு செவி சாய்க்காமல் உற்சாகமாக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அமைதியாக யாருக்கும் எந்த தீங்கும் செய்யக்கூடாது. ஜனாதிபதியின் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கும் இதே வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X