2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தேர்தலில் இடையூறு; யோகேஸ்வரன் எம்.பி. முறைப்பாடு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 08 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இடையூறு விளைவித்துள்ளதாக பவ்ரல் அமைப்பிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் முறைப்பாடு செய்துள்ளார்.  

இன்று வியாழக்கிழமை (08) சீ.யோகேஸ்வரன் எம்.பி. செய்துள்ள முறைப்பாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றவேளை, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான எஸ்.சந்திரகாந்தனும் அவரது குழுவினரும் வாகரைப்பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்பாக இருந்து தீவிரமாக பிரசாரம் செய்துவருவதாக மக்கள் எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

அதன் உண்மைத்தன்மையை அறியும் வகையில், அவசரமாக குறித்த பிரதேசத்துக்கு சென்றவேளை, வாகரைப் பிரதேசத்தின் அம்பந்தனாவெளி வம்மிவட்டவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக மாகாணசபை உறுப்பினர் எஸ்.சந்திரகாந்தன் மற்றும் அவரது குழுவினர் பாதுகாப்பு படையினர் சகிதம் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர்.

நான் வாக்களிப்பு நிலைய எல்லைக்கு அப்பால் சென்று வீதியின் ஓரமாக எனது வாகனத்தை நிறுத்தி வாகரைப் பொலிஸ் பிரிவு தேர்தல் கண்காணிப்புக்கு இச்செய்தியை வெளிப்படுத்த முயற்சி செய்துகொண்டிருந்தவேளை, தமது குழுவினர் மற்றும் பாதுகாவலர்கள் சகிதம் வருகைதந்த கிழக்கு  மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சந்திரகாந்தன் எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

தேர்தல் நீதியும் நியாயமுமான முறையில் நடைபெற வேண்டும். தேர்தல் பிரசாரக்காலம் முடிந்த பின் எவ்வாறான பிரசாரத்தையும் மேற்கொள்ளமுடியாது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X