Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றுகின்ற உள்ளக கணக்காய்வு உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் கணக்காய்வு உத்தியோகஸ்தருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊழியர்கள் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக திங்கட்கிழமை (9) அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு அதிகார் வீதியில் வசிக்கும் மேற்படி கணக்காய்வு உத்தியோகஸ்தரின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (9) இரவு சென்ற இனந்தெரியாத நபர்கள் மூன்று பேர் வீட்டில் தாக்குதலை மேற்கொண்டதுடன், கணக்காய்வு உத்தியோகஸ்தருக்கும் அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலின்போது கணக்காய்வு உத்தியோகஸ்தரின் உறவினர் ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வேளையில் மேற்படி கணக்காய்வு உத்தியோகஸ்தர் வீட்டில் இருக்கவில்லை.
இந்த நிலையில், மேற்படி கணக்காய்வு உத்தியோகஸ்தரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்;மையாக கண்டிப்பதுடன், இந்த தாக்குதலை மேற்கொண்டவர்களை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பணிப்பகிஷ்ரிப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.ரங்கநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
21 minute ago
35 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
35 minute ago
4 hours ago
4 hours ago