2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மின்னல் தாக்கியதால் ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணிக் கிராமத்தில் திங்கட்கிழமை (09) இரவு மின்னல் தாக்கியதால், மேற்படி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி தெய்வேந்திரன் (வயது 34) என்பவர் உயிரிழந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் உறக்கத்தில் இருந்தவேளையிலேயே மின்னல் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மட்டக்களப்பின் சில பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக இடி, மின்னலுடன் மழை பெய்துவருகின்றது.

இந்த மின்னல் தாக்கத்தினால் இவரின் அறையில் இருந்த பிரதான மின் ஆளியும் ஏனைய மின் ஆளிகளும் சேதமடைந்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X