2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

காத்தான்குடி நகரசபை பிரிவில் 75 பேருக்கு டெங்கு காய்ச்சல்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபை பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை (10) வரை 75 பேர், டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளமை  இனங்காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடி நகரசபை பிரிவில் ஆறாம் குறிச்சிப்பகுதியிலேயே டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை கண்டறியும் நடவடிக்கை புதன்கிழமை (11) மேற்கொள்ளப்பட்டது.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி  டாக்டர் யு.எல்.நசிர்தீன் தலைமையில் காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லாஹ், அஸ்ஸ§ப்பான் நலன்புரி அமைப்பு மற்றும் றப்பானிய்யஹ் இளைஞர் கழக உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்பு பெரும் இடங்களை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், வீட்டு உரிமையாளர்களுக்கு டெங்கு தொடர்பான விழிப்புணர்வையும் வழங்கினர்.

இதன்போது பாலர் பாடசாலைகள் மற்றும் பிரத்தியோக கல்வி நிலையங்களிலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

காத்தான்குடி நகரசபை பிரிவில் கடந்த வாரம் சிறுமி உட்பட இருவர் டெங்கினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X