Gavitha / 2015 பெப்ரவரி 15 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்துக்கான புதிய காரியாலயம் சனிக்கிழமை (14) திறந்து வைக்கப்பட்டது.
முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இந்த காரியாலயத்தை திறந்து வைத்தார்.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை காத்தான்குடி காரியாத்துக்கு பின்னால் உள்ள நகரசபை கட்டடத்தில் இந்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்இன் உப தலைவர் என்.எம்.ஸாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எல்.எம்.பரீட் யு.எல்.எம்.என்.முபீன், காத்தான்குடி மின் அத்தியட்சகர் எம்.ஏ.சீ.எம்.நௌபல், விளையாட்டு உத்தியோகஸ்தர்; எம்;.வை.ஆதம்லெப்பை உட்பட கால்பந்தாட்ட சங்கத்தின் நிர்வாகிகள், விளையாட்டு கழகங்களின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி கால்பந்தாட்ட சங்கமானது முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் உருவாக்கப்பட்டது
சுமார் 5 இலட்சம் நிதி ஒதிக்கீடு செய்ததன் மூலம் சங்கத்துக்கான மடிகணினி, காரியாலய தளபாடங்கள், விளையாட்டு உபகரணங்கள், டிஜிடல் புரஜெக்டர் உட்பட பல பொருட்களை பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக, சங்கத்தின் உப தலைவர்களில் ஒருவரான என்.டீ.பாறூக் தெரிவித்தார்.

15 minute ago
56 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
56 minute ago
6 hours ago