2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞன் கைது

Sudharshini   / 2015 பெப்ரவரி 15 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்


மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் அலியார் வட்டை கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த திருகோணமலை, சம்பூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரொருவரை வெல்லாவெளிப் பொலிஸார் சனிக்கிழமை (14) கைது செய்துள்ளனர்.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,


மேற்படி நபர் தொழில் நிமிர்த்தம் அம்பாறை பிரதேசத்திலுள்ள நைனாகாடு கிராமத்தில் செங்கல் அறுக்கும் வேலையில் ஈடுபட்டுவந்ததாகவும், வெல்லாவெளி விளாந்தோட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி, தன்னுடன் நைநாகாடு அழைத்து சென்று கடந்த பல தினங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்துள்ளார்.


குறித்த நபர், சிறுமியை சனிக்கிழமை (14) சிறுமியின் வீட்டுக்கு அழைத்து வந்துக்கொண்டிருந்த போது, பிரதேச வாசிகளினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே குறித்த நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


மேற்படி இளைஞனை பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகவும் சிறுமியிடமிருந்து வாக்கு மூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்வம் குறித்த விசாரணைகளை வெல்லாவெளிப் பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X