Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் செல்வாநகர் கிழக்கு கிராமத்தில் வாழ்வாதாரத்தை மையப்படுத்திய கிராம அபிவிருத்தித்திட்டத்தை சிகரம் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினூடாக மக்கள் பங்களிப்புடன் உருவாக்கும் ஆரம்ப நிகழ்சித்திட்டம் வியாழக்கிழமை (19) இடம்பெற்றது.
சிகரம் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இணைப்பாளர் எம்.எல்.எம்.றிஸ்லி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை இலகுபடுத்துநர் த.வசந்தராஜா வளவாளராக கலந்துகொண்டார். செல்வாநகர் கிழக்கு கிராம மக்களுடன் இணைந்து அக்கிராமத்தின் வாழ்வாதாரத்தை மையப்படுத்திய கிராம அபிவிருத்தித்திட்டம் தயாரிக்கப்பட்டது.
இதன்போது முதன்மை இலகுபடுத்துநர் தெரிவிக்கையில்,
'கடந்த 30 வருடகாலப் போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் மக்களது சமூக பொருளாதார வாழ்வு கணிசமான அளவு பின்தள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு பின்தள்ளப்பட்டுள்ள இந்நிலைமையை மாற்று முகமாக பல அரசசார்பற்ற நிறுவனங்களும் அரச திணைக்களங்களும் குறிப்பாக, சமூக மட்ட அமைப்புக்களும் இன்றுவரை கிராம மட்டத்தில் பாடுபட்டு வருகின்றன. அந்த வகையில் சிகரம் சமூக அபிவிருத்தி நிறுவனமும் கிராம அபிவிருத்தித்திட்டங்களைத் தீட்டி மக்களது சமூக பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த பாடுபட்டுவருகின்றது.
அநேகமான திட்டங்கள் காலப்போக்கில் வலுவிழந்துபோவதற்கும் தோல்வியில் முடிவதற்கும் மக்களது பங்களிப்பின்மையே பிரதான காரணமாகும். மக்கள் பங்களிப்பின்றிய திட்டங்களோ சரி, வேறு எந்த முயற்சிகளோ சரி, வெற்றி பெற்ற வரலாறு கிடையாது. எனவே, மக்களுக்கான அபிவிருத்தித்திட்டங்கள் வெற்றி பெறவேண்டுமானால் மக்களது பங்களிப்பை திட்டமிடலின் ஒவ்வொரு அம்சத்திலும் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் செல்வாநகர் துர்க்கா அமைப்பின் உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், சிகரம் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் களப்பணியாளர் எஸ்.வினோதா, மாதர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவி. திருமதி. க.சந்திரகுமாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
14 minute ago
55 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
55 minute ago
6 hours ago