Gavitha / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு நகரப் பிரதேசத்தில் அதிகரித்துச் செல்லும் டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் நகரில் மாநகர சபையினரால் சனிக்கிழமை (21) இடம்பெற்றன.
மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 120 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகி 80 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
வடிகான்கள், கழிவுகள் உள்ள இடங்கள், பாராமரிப்பற்ற நீர்த் தாங்கிகள் மற்றும் வளவுகள் என்பன பரிசோதிக்கப்பட்டு கடைகள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் கண்டிக்கப்பட்டனர்.
வார நாட்களில் உக்கக்கூடிய, உக்காத மற்றும் மீள் சுழற்சிக்குரிய கழிவுகளை சேகரிக்கும் நாட்கள் மற்றும் இடங்கள் பற்றிய அறிவித்தல்கள் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டதோடு ஒலிபெருக்கிகள் மூலம் டெங்கு அபாயம் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .