2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வெளிநாட்டிலுள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் அறிமுகம்

Gavitha   / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து கொண்டு தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு ஐந்தாம் ஆண்டு, க.பொ.த. சா.தரம், மற்றும் உயர் கல்விக்கான புலமைப்பிரிசில்களை வழங்கும் திட்டமொன்றினை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

அதனால் இது தொடர்பான விண்ணப்பங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

விண்ணப்பங்களை அந்தந்த பிரதேச பாடசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப்பணியகம் அறிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளி அடிப்படையில் சித்தியடைந்து, அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் பிள்ளைகளின் பெற்றோர் 2009.08.21ஆம் திகதிக்கும் 2014.08.21ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலங்களில் பணியகத்தில் பதிவு செய்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்றுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

அத்துடன் 2008.12.01ஆம் திகதிக்கும் 2013.12.01க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துவிட்டு வெளிநாடு சென்றுள்ள பெற்றோர்களின் பிள்ளைகளில் 2013ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் படிப்பதற்கான தகமைகளை ஒரே தடவையில் பெற்று அரச பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்பவராக இருத்தல்.

அத்துடன் 2008.08.01ஆம் திகதிக்கும் 2013.08.01க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பணியகத்தில் பதிவு செய்து விட்டு வெளிநாடு சென்றுள்ள பெற்றோர்களின் பிள்ளைகளில் 2013ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து தற்போது அரச பல்கலைக்கழகம் ஒன்றில் முழுநேர உள்வாரி பட்டப்படிப்பு முதல் வருடத்தில் கற்பவராக இருத்தல் போன்ற தகைமைகளைக் கொண்ட மாணவர்கள் இந்த புலமைப்பரிசில் திட்டத்துக்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் பணியகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகாமையாளர் (நலன்புரி), இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம், இல-234,  டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, கொஸ்வத்தை, பத்தரமுல்லை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் விண்ணப்பதாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X