Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பள்ளிவாசல்களில் பணி புரியும் கதீப்மார், இமாம்கள், முஅத்தீன்களின் இறைபணி சமூகத்தில் மகத்தானது. இவர்கள் சமூகத்தால் கௌரவிக்கப்படவேண்டியவர்கள் என்று மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளி முதன்மை இமாம் மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் பலாஹி தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள பெரிய மௌலானா பள்ளிவாசலில் கடந்த 25 வருடங்களாக இமாமாக கடமை புரிந்த மௌலவி எம்.பி.ஆதம்பாவா பலாஹி ஓய்வுபெற்றதை அடுத்து அப்பள்ளிவாசல் நிர்வாகம் நேற்று சனிக்கிழமை இரவு சேவை நலன் பாராட்டு விழாவை நடத்தியது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மௌலவி எம்.பி.ஆதம்பாவா பலாஹி கடமையில் நேர்மை தவறாமல் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மஹல்லா ஜமாஅத்தாரின் அபிமானத்ததை பெற்று அர்ப்பணி;ப்புடன் கடமை செய்துள்ளார எனவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் காத்தான்குடி காதி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி உட்பட காத்தான்குடி பள்ளிவாசல்கள் கதீப்மார், இமாம்கள், சம்மேளனத்தின் உறுப்பினர்கள், உலமாக்கள் பள்ளிவாசல்; நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .