2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கழிவுகளை தரம் பிரித்து சேகரிக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாநகரசபை பிரிவில் கழிவுகளை உக்கக்கூடிய கழிவுகள்,  உக்க முடியாத கழிவுகள் என்று  தரம் பிரித்து சேகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

ஐரோப்பிய யூனியனின் மேலதிக நிதியுதவியுடன் யுனெப்ஸ் நிறுவனத்தின் ஊடாக இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.  

இந்த திட்டத்துக்கு மட்டக்களப்பு மாநகரசபை பிரிவிலுள்ள பொதுமக்கள்  ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தத் திட்டத்தை பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு மட்டக்களப்பு மாநகரசபை பிரிவுக்குற்பட்ட
மட்டக்களப்பு, கோட்டமுனைப் பிரதேசத்தில் பரீட்சார்த்தமாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும்; அடுத்த கட்டமாக வெட்டுக்காடு பிரதேசத்தில் இந்தத் திட்டத்தை  நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும்  அவர் கூறினார்.
இந்தத் திட்டம் தொடர்பில் பிரதேச மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X