2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

'பாடசாலைகளின் தளபாட பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்'

Gavitha   / 2015 பெப்ரவரி 23 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் தளபாட பற்றாக்குறை மற்றும் பூர்த்தி செய்யப்படாத கட்டடப்பணிகளை புதிய அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் பூர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் 13ஆம் திகதி இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஸ்ணன், மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அதன் மூலம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் பற்றாக்குறைகள் தீர்த்துவைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று கல்விக் கோட்டத்துக்குட்பட்ட தாழங்குடா விநாயகர் வித்தியாலயத்தில் இரண்டு மாடிக்கட்டடத்திறப்பு விழா திங்கட்கிழமை (23) நடைபெற்றது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் விஷேட திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் சுமார் 65

இலட்சம் ரூபாய் செலவில் இந்த இருமாடிக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

நான்கு வகுப்பறைகள், அதிபர் அலுவலகம் ஆகியன இந்த புதிய கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை அதிபர் எஸ்.மதிசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட கல்வி திணைக்கள அதிகாரிகள், பெற்றோர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X