Gavitha / 2015 பெப்ரவரி 23 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மாஞ்சோலை பதுரியா 207ஏ கிராம சேவகர் பிரிவில் உள்ள கிராம சேவகரை இடமாற்றிய சம்பவம் தொடர்பாக, மாஞ்சோலை பதுரியா 207ஏ கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மக்கள் திங்கட்கிழமை (23) பிரதேச செயலகத்துக்கு முன்னாள் எதிர்ப்பு பேரணி ஒன்றில் ஈடுபட்டனர்.
மாஞ்சேலை பதுரியா கிராம சேவகராக கடமையாற்றிய யூ.எல்.எம்.நஜீப் என்பவரை, அப்பகுதியில் உள்ள சிலர் பிரதேச அரசியல்வாதியின் ஒத்துழைப்புடன் கடந்த 27.01.2015ஆம் திகதி இடமாற்றம் செய்யப்பட்டார்.
மக்கள், மாவட்டச் செயலாளரிடம் சென்று கொடுத்த வேண்டுகோளுக்கிணங்க, உதவி மாவட்டச் செயலாளரினால் 05.02.2015ஆம் திகதி ஒப்பமிட்டு குறித்த இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
எனினும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் குறித்த கிராம சேவகரை மாஞ்சோலை பதுரியா கிராமத்துக்கு கடமைகளை பொறுப்பேற்க அனுமதிக்கவில்லை என்று கோரியே ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலகத்துக்கு முன்னாள் நியாயம் கேட்டு வந்திருந்தனர்.
இன்று திருகோணமலையில் இடம்பெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதேச செயலாளர் சென்றுள்ளதால், இதற்கான தீர்வு தன்னால் வழங்க முடியாது என்றும் எதிர்வரும் புதன்கிழமை பிரதேச செயலகத்துக்கு குறிப்பிட்ட சிலர் வந்து பிரதேச செயலாளரை சந்தித்து உரையாடுமாறும் அன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்கும் சென்று மாவட்டச் செயலாரை சந்திக்குமாரும் ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

35 minute ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
6 hours ago