Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
புதிய காத்தான்குடி பரீட் நகர் பகுதியில் பழுதடைந்துள்ள பாம் வீதி, கர்பலா வீதிகளை உடனடியாக புனரமைப்பதற்கான அனுமதியை நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாஸீம் வழங்கியுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்தது.
பாம் வீதியை உரிய முறையில் புனரமைப்பதில் இழுத்தடிப்பு செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 03.02.2015 அன்று பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதுபோலவே, கர்பலா வீதியை புனரமைத்து தருமாரறு கோரி பாலமுனை பிரதேச மக்களினால் கடந்த 13.02.2015 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், பாம் வீதியை உடனடியாக அமைத்து தருமாறு மக்கள் சார்பாக கோரும் அவசரக்கடிதத்தை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான், கடந்த 05.02.2015 அன்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாஸீமுக்கு அனுப்பிவைத்திருந்தார். கர்பலா வீதியை உடனடியாக அமைத்து தருமாறு கோரும் கடிதத்தை அப்பிரதேச மக்கள் சார்பாக ஹசனாத் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகளினால் நெடுஞ்சாலை அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த அபிவிருத்தி வேலைகளை துரிதப்படுத்தும் வகையில் விஷேட சந்திப்பு, நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளருடனும் அதன் பிரதம பொறியியலாளருடனும் நடத்தப்பட்டது. இந்த சந்திப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் தவிசாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான், தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ் நளீமி, ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அதன் காத்தான்குடி அமைப்பாளர் எச்.எம்.எம்.முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்டனர்.
24 minute ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
6 hours ago