Gavitha / 2015 பெப்ரவரி 24 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் நான்கு தினங்களுக்கு எட்டு மணி நேர மின் வெட்டு இடம் பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு கல்லடி மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
25ஆம் திகதி காலை 9மணி முதல் மாலை 5மணி வரை காமாச்சி அம்மன் கோயில் பகுதி, விபுலானந்தபுரம், சவுக்கடி மற்றும் 26ஆம் திகதி காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மாவடிவேம்பு, வந்தாறுமூலை, கொம்மாதுறை, செங்கலடி, கொடுவாமடு, இலுப்படிச்சேனை, கரடியனாறு, கோப்பாவெளி, பெரியபுல்லுமலை, உன்னிச்சை, ஆயித்தியமலை, நரிப்புல் தோட்டம் மற்றும் ஏறாவூர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பகுதி முழுவதும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
மேலும் 27ஆம் திகதி காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மஞ்சந்தொடுவாய், நாவற்குடா, பூநொச்சிமுனை மற்றும் கல்லடி பகுதிகளிலும் 28ஆம் திகதி காலை 9மணி முதல் மாலை 5மணி வரை புன்னக்குடா வீதி, மிச்நகர், மீராங்கேணி, சதாம் குசைன் கிராமம், ஐயங்கேணி, தைக்கா வீதி, மக்களடி வீதி மற்றும் தாமரைக்கேணி ஆகிய பிரதேசங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago