Gavitha / 2015 பெப்ரவரி 24 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்,th.fpU];zh
மட்டக்களப்பு மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் முயற்சி அபிவிருத்திக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை (24) மட்டக்களப்பு கோப் இன் விடுதியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் மற்றும் விவசாய சம்மேளனம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில்,
தொழில் முயற்சியாளர்களின் திறன் மற்றும் வியாபார அறிவை விருத்தி செய்தல், நிதி முகாமைத்துவம், அடிப்படைக் கணக்கியல், கடன் செலுத்தாமல் உள்ளவர்களுக்கான அறிவூட்டல், தொழில் விருத்திக்கு உதவி செய்தல், புதிய முதலீட்டாளர்களுக்கான ஆலோசனைகள், உற்பத்தியின் போது சுற்றாடலை மாசுபடாது தடுத்தல் பற்றி விழக்கமளிக்கப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள், உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தலின்; போது, முகம் கொடுக்கும் பிரச்சினைகள், நிதிப் பற்றாக்குறைகள் பற்றிய கேழ்விகளுக்கு பதிலளிக்கப்பட்டன.
இலங்கை வர்த்தக மன்றத்தின் திட்ட முகாமையாளர் சந்திரா விதானகே, நிதித் திட்டமிடல் அமைச்சை சேர்ந்த நிதி முகாமையாளர் ஜோறீசா வல்பிட்டிக்கம, சுழலியலாளர் சமிந்த அபேசிங்க, உதவிப் பணிப்பாளர் வசந்தி விஜேரட்ண, உலக வங்கியின் கொழும்பு அலுவலக ஆலொசகர் துங்கசிறி கமஹே, வளவாளர் ஆர். லோகநாதன் மற்றும் மட்டக்களப்பு வர்த்தக மன்றத்தின் தலைவர் எஸ். அகிலன், பிரதான நிறைவேற்று அதிகாரி கே. குகதாஸ் கலந்து கொண்டனர்.
நாள் முழவதும் நடைபெறும் இக்கருத்தரங்கில் மாவட்டத்திலிருந்து 200 தொழில் முயற்சியாளர்கள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .