2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கலப்படம் செய்யப்பட்ட தேன் மீட்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 01 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வெட்டுக்காடு பகுதியில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, போத்தல்களில் அடைக்கப்பட்ட தேன்களை பொதுச்சுகாதார பரிசோதகர்கள், சனிக்கிழமை (28) கைப்பற்றியுள்ளனர்.

வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் சோ.அமுதபாலன் தலைமையில் மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே போத்தல்களில் அடைக்கப்பட்ட கலப்படம் செய்யப்பட்ட தேன்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த கலப்பட தேன் போத்தல்களை கொண்டுவந்தவர் அவற்றினை கைவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் அவரை கைதுசெய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் சோ.அமுதபாலன் தெரிவித்தார்.

சுத்தமான தேன் எனக்கூறி பெருமளவில் சீனிப்பாகு கலந்த தேன் போத்தல்களை 800 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையில் விற்பனை செய்துவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில், கலப்படம் செய்யப்பட்ட பானங்களை விற்பனை செய்வோர் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுச் சுகாதார பரிசோதர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், இவை சுகாதாரத்துக்கு பெரும் தீங்குகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது எனவும் எச்சரித்துள்ளார்.

அண்மைக்காலமாக நாட்டின் பல பாகங்களிலும் கலப்படம் செய்யப்பட்டு தயாரிக்கப்படும் பானங்கள் கைப்பற்றப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X