Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 மார்ச் 01 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையையும் எழுவான் கரையியையும் இணைக்கும் மிக முக்கிய பாலமாகவுள்ள மண்முனைப்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் நீண்டகாலமாக ஒளிராமல் இருந்தது.
இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து சனிக்கிழமை (28) பாலத்தில் உள்ள மின் விளக்குகளை திருத்தும் பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் இருந்து இரவு வேளைகளில் படுவான்கரை நோக்கிச்செல்லும் மக்கள் இருள் காரணமாக இந்த பாலத்தின் ஊடாக செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்ட இந்த பாலத்தில் அடிக்கடி மின் தடைப்படுவதனால் அதனால் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவந்தனர்.
குறிப்பாக அம்பாறையில் இருந்து மட்டக்களப்புக்கு வரும் பயணிகளில் அதிகமானோர் இந்த பாதையினையே தற்போது பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago
37 minute ago
39 minute ago