Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 மார்ச் 02 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
'நாங்கள் எல்லோரும் ஒரு தாயின் பிள்ளைகள். எமது கலாசாரங்களுக்கு இடையில் இணைந்த செயற்பாடு உண்டு' இவ்வாறு கலாசார இராஜாங்க அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில்; அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தை முன்னிட்டு 'தமிழ் இசை வேள்வி' நிகழ்ச்சி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'பௌத்த மத கலாசாரத்துக்கும் இந்து மத கலாசாரத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்பும் உடன்பாடும் உள்ளன. சித்திரை புத்தாண்டை எடுத்துக்கொண்டால், தமிழ், சிங்கள புத்தாண்டு என்றே கூறப்படுகின்றது. நாங்கள் எல்லோரும் சகோதரர்கள்.
நாம் ஏன் இன ரீதியாக பார்க்கவேண்டும்? ஏன் எங்களுக்குள்; சண்டை ஏற்பட வேண்டும்? நோய் வாய்ப்பட்டுள்ள மனிதனுக்கு இரத்தம் தேவைப்படின், அந்த மனிதனுக்கு இன, மத ரீதியாக பார்த்து இரத்தம் வழங்கப்படுவதில்லை. இரத்த வங்கியிலிருக்கும் இரத்த மாதிரியை பார்த்து இரத்தம் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில், அந்த மனிதன் உயிர் பிழைக்கின்றான்.
சாதி, மத, குல பேதம் இருக்கக்கூடாது. எங்களிடம் மனிதநேயம் இருக்கவேண்டும். நாம் ஒரேயொரு சாதி. அது மனித சாதியாகும். மனிதன் என்பவன் உயர்வாக மதிக்கப்பட வேண்டியவன். அது யாராக இருந்தாலும், மதிக்கப்படவேண்டும். மனிதத்தன்மை இருக்கவேண்டும். மனிதனை மனிதாக மதிக்கவேண்டும். இதன் மூலம் மனிதநேய செயற்பாடும் இருக்கவேண்டும்' என்றார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஏ.ரங்கநாதன், கிழக்க பல்லைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிறேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago