Suganthini Ratnam / 2015 மார்ச் 02 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கல்குடாத்தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரத்தை பலப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம், கல்குடாத்தொகுதியின் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏறாவூரிலுள்ள அவரது அலுவலகத்தில் முதலமைச்சரை ஞாயிற்றுக்கிழமை (01) சந்தித்தபோது, அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதன்போது கல்குடாத்தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் முதலமைச்சரின் இணைப்பாளருமான ஏ.எல்.லியாப்தீன், முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களான யூ.அஹமட், என்.எம்.றிழா மற்றும் முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூதின் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
எதிர்காலத்தில் கல்குடாவில் முன்னெடுக்கவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பான அறிக்கையும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .