Suganthini Ratnam / 2015 மார்ச் 02 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக கால்களை இழந்த மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு உதவிகள் திங்கட்கிழமை (2) வழங்கப்பட்டன.
இந்த நிலையில், கணவனை இழந்த பெண்கள் 5 பேருக்கு தலா 100,000 ரூபாய் படியும்; கால்களை இழந்த 6 பேருக்கு சக்கரநாற்காலிகளும்; ஞானம் பவுண்டேஷன் மற்றும் லைக்கா மொபைல் நிறுவனத்தினால்; வழங்கப்பட்டன.
வவுணதீவு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலராஜன், திட்டமிடல் அதிகாரி வி.ஹசன், அணிதிரட்டுனர் யு.உமாசங்கர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .