Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 மார்ச் 03 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம், காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்கான ஆசிரியர்களை நியமிப்பதாக ஏறாவூர், மத்திய கல்வி அலுவலகத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் என்.சிதம்பரமூர்த்தி தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம், காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்கான ஆசிரியர்கள், இதுவரை நியமிக்கப்படாததால் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களை வேறு பாடசாலைகளில் சேர்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக பெற்றோர், ஏறாவூர், மத்திய கல்வி அலுவலகத்துக்கு முன்னால் திங்கட்கிழமை(2) திரண்டுள்ளதுடன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிதம்பரமூர்த்தியிடம் தமது கோரிக்கையை முன்வைத்தனர்.
நீண்டகாலமாக இந்தப் பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்த ஆசிரியர் எவரும் இல்லை என்ற குறையை கல்வி அதிகாரிகளுக்கு தாங்கள் பல தடவை சுட்டிக்காட்டியிருப்பதாக தெரிவித்த பெற்றோர் இந்த அதிருப்தி காரணமாகவே கல்வி அலுவலகத்துக்கு முன்னால் திரண்டதாகத் தெரிவித்தனர்.
வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் இல்லாத காரணத்தினால் நிர்வாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிதம்பரமூர்த்தியிடம் இவ்விடயம் தொடர்பில் விளக்கி கூறியுள்ளதுடன் அதனால் தமது பிள்ளைகளை பாடசாலையிலிருந்து விலக்கிச் செல்ல நேரிடுவதாகவும் கூறினர்.
இதனைக் கேட்டறிந்துகொண்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிதம்பரமூர்த்தி எதிர்வரும் புதன்கிழமையன்று தீர்மானமெடுத்து ஆசிரியர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார். இதனையடுத்து பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago