Kanagaraj / 2015 மார்ச் 03 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா கிருஸ்ணபிள்ளையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மட்டக்களப்பு அரசடித்தீவு சக்தி மகளிர் இல்ல மாணவிகளுக்கான பயிற்ச்சிப் புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு திங்கட கிழமை (02) அரசடித்தீவு சக்தி மகளிர் இல்லத்தில் இடம்பெற்றது.
மகளிர் இல்லத்தின் தலைவர் எஸ்.புஸ்பலிங்கம் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலந்து கொண்டு புத்தகங்களை இல்ல மாணவிகளிடம் கையளித்தார்.
தரம் ஐந்து தொடக்கம் க.பொ.த.உயர்தரம் வரையான அனைத்துப் பாடங்களுக்கான பயிற்சிப்புத்தகங்களும், தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை, க.பொ.த.சாதாரண பரீட்சை, உயர் தரப் பரீட்சை போன்ற பொதுப் பரீட்சைகளுக்கான கடந்தகால வினாவிடைத் தொகுப்புப் புத்தகங்கள் அடங்கலான சுமார் இருநூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்கள் இதன் போது கையளிக்கப்பட்டன.
இதன் போது ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான புத்தகங்களே இவ்வாறு கையளிக்கப்பட்டன.
அரசடித்தீவு சக்தி மகளிர் இல்ல மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ள இப்புத்தகங்கள் நிச்சயம் இம்மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பதோடு, இந்த இல்ல வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் இவ்வாறு புத்தகம் வழங்கவில்லை என இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.
22 minute ago
25 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
25 minute ago
28 minute ago