Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 04 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
தமிழினத்தை ஏமாற்றமுடியும் என்று தற்போதைய அரசாங்கம் நினைத்துச் செயற்பட்டால், அரசாங்கமே ஏமாந்து வீடு செல்லவேண்டி ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காக்காச்சிவட்டைக் கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், களுவாஞ்சிக்குடியிலுள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை (4) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
'தமிழினத்தை அன்றும் ஏமாற்றினோம். நாளையும் ஏமாற்றுவோம் என்று நாட்டின் தற்போதைய ஜனாதிபதி, மற்றும் பிரதமர் நினைக்கக்கூடாது. இனிமேலும் தமிழினத்தை ஏமாற்றுகின்ற சூழ்நிலை ஏற்படுமாயின், கடந்தகால தமிழ் மக்களின் வரலாற்றை மீண்டும் திருப்பிப்பார்க்க வேண்டிய சூழ்நிலை இந்த நாட்டு அரசாங்கத்துக்கு ஏற்படும்.
இந்த நாட்டை சேர்ந்தவனும் நேசிக்கின்றவனும்; என்ற வகையில் இந்த நாட்டில் மீண்டும் பிரிவினை வாதம் உருவாகக்கூடாது, இந்த நாடு உலகளாவிய ரீதியில் புகழ் பெறவேண்டும், மக்கள் நிம்;மதியாக வாழவேண்டும் என்பதற்காகவே இதை நான் கூறுகின்றேன்.
தமிழரின் வரலாறு தெரியாமல் தமிழரோடு விளையாட வேண்டாம் என்று விநயமாக வேண்டிநிற்கின்றேன். அதை மீறி விளையாட நினைத்தால், பல விளையாட்டுக்கள் இந்த நாட்டில் மீண்டும் உருவாகும். ஆனாலும், அந்த விளையாட்டுக்களை விரும்பாதவன் என்ற வகையில் இதனை நான் தெரிவிக்கின்றேன்.
இந்த நிலையை தவிர்க்கவேண்டுமாயின், அரசாங்கம் தமிழினத்தை எந்த வகையில் அரவணைக்கவேண்டுமோ, அந்த வகையில் அரவணைத்து செல்லவேண்டும். தமிழ்த் தலைமையின் கருத்தை செவிமடுத்து அதை கருத்தில் எடுத்து எதிர்காலத்தில் செயற்படவேண்டும்' எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago