Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 04 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பத்து மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக அதன் தவிசாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அதன் அலுவலகத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் இதனைக் கூறினார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கொழும்பு, கம்பஹா, கண்டி, குருநாகல், புத்தளம், பதுளை, வன்னி ஆகிய பத்து மாவட்டங்களிலும் தமது வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்றைய அரசியல் சூழலில் தரமான மக்கள் பிரதிநிதிகளே நாட்டுக்கும் மக்களுக்கும் தேவைப்படுகின்றனர். நல்லாட்சி என்பது இனம், சமயம் என்பவற்றுக்கு அப்பால் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இந்த நாட்டில் நல்லாட்சியை உறுதிப்படுத்தவேண்டுமானால், நீதியின் அடிப்படையில் செயற்படக்கூடிய மக்கள் பிரதிநிதிகளே அடுத்த நாடாளுமன்றத்துக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட வேண்டும். அவ்வாறானவர்கள் தெரிவுசெய்யப்படும்போது, இலங்கை சக வாழ்வுமிக்க அபிவிருத்தியை நோக்கிய நல்லாட்சிமிக்க நாடாக முடியும்.
இந்த இலக்குடன்; நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது' எனவும் அவர் கூறினார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தேசிய அமைப்பாளர் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago