Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 மார்ச் 05 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
நோயும் விபத்தும் எப்போதும் ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் உயிராபத்தும் ஏற்படுவதுண்டு. உயிராபத்தை போக்குவதற்கும் நிலமை மோசமடையாமல் இருப்பதற்கும் விரைவில் குணமடைவதற்கும் முதலுதவி அறிவு அவசியம் என சிரேஷ்ட முதலுதவி போதனாசிரியரும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் தலைவருமான த.வசந்தராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கான அடிப்படை முதலுதவிப் பயிற்சி புதன்கிழமை (04) இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'உடலில் காயங்கள் ஏற்படும்போதும் அவயவங்களில் முறிவுகள் ஏற்படும்போதும் சாதாரண மக்களால் அவற்றை கையாளத் தெரிவதில்லை. தொண்டையில் உணவு, நீர் முதலானவை சிக்கும்போதோ அவற்றை எவ்வாறு கையாள்வதென்று படித்தவர்களுக்கு கூட தெரிவதில்லை. இதனால் உயிரிழப்புக்களோ அல்லது உடற்பாதிப்புக்களோ ஏற்படுகின்றன.
இவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டுமானால், முதலுதவி அறிவு மக்களிடையே பரப்பப்படல் வேண்டும். முக்கியமாக வேலைத்தளங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே வேலைத்தளங்களில் உள்ளோரில் கணிசமானோர் முதலுதவி அறிவு பெற்றோராக இருத்தல் அவசியம். அந்த வகையில், மட்டக்களப்பிலே பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு அதன் நிர்வாகம் முதலுதவிப் பயிற்சிகளை வழங்கி வருவது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்' என அவர் கூறினார்.
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago