2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்களை இந்தியா கவனிக்கும்'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 08 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன், வடிவேல் சக்திவேல் 

வடமாகாணம் இந்திய அரசால் எவ்வாறு கவனிக்கப்படுகின்றதோ, அதுபோன்று கிழக்கு மாகாணத்திலும் தமிழ், முஸ்லிம் மக்களை இந்தியா கவனிக்கும் என்று  இந்திய வெளியுறவுத்துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடையிலான சந்திப்பு, கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில்  நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த சந்திப்பில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும்  வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி, கட்சியின் பிரதித் தலைவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஆட்சி சம்பந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ள  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் விவரம் தொடர்பிலும்  இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X