Suganthini Ratnam / 2015 மார்ச் 09 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான மங்களகமவில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு இராணுவத்தின் 231ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
35 குடும்பங்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பிரிக்கேட்டின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பாலித பெர்ணான்டோவின் வழிகாட்டலில் இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மங்களகம விகாரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் 231ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் பாலித பெர்ணான்டோ, 8ஆவது கெமுனு படைப்பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இராணுவத்தின் சமூக சேவைத்திட்டத்தின் ஒரு படியாக இந்த உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக 231ஆவது படைப்பிரிவு தெரிவித்தது.
2 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago