2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு

Gavitha   / 2015 மார்ச் 10 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

மட்டக்களப்பில் இயங்கிவரும் அறக்கட்டளை நம்பிக்கை நிதியத்தினால்,  படுவாங்கரைப் பிரதேசத்திலுள்ள 7 பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்களும் 50,000 ஆயிரம் ரூபாய் காசோலைகளும் வழங்கி வைக்கும் நிகழ்வு, மண்டூர் இராமகிர்ஷ்ண மிசன் வித்தியாலயத்தில் அதிபர் வே.ஜெயரெட்ணம் தலைமையில் திங்கட்கிழமை (09) இடம்பெற்றது.

அமரர்களான கந்தையா, செல்லாம்மா, செல்வநாயகம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக இயங்கிவரும் அறக்கட்டளை நம்பிக்கை நிதியம் இந்தச்சேவையினை வழங்கி வருகிறது. அதில் ஒரு கட்டமாக இந்த உதவி வழங்கப்பட்டது.

முன்னாள் மண்டூர் மக்கள் வங்கியின் முகாமையாளரும் இம்மன்றத்தின் பணிப்பாளருமான ஸ்ரீ சிவானந்தம், ஓய்வு பெற்ற பிரதேச செயலாளர் எஸ்.கதிர்காமநாதன், வெல்லாவெளி பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், ஓய்வு பெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X