Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 மார்ச் 10 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
100 நாட்கள் வேலைத்திட்டத்தில் வட, கிழக்கு தமிழ் மக்களுக்கு கிடைத்த பயன் என்ன? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன், திங்கட்கிழமை (09) கேள்வியெழுப்பினார்.
மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மண்டூர் 40ஆம் கொலணி அ.த.க.பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது கொண்ட வெறுப்பின் காரணமாகவே வடக்கு, கிழக்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருந்தோம். மாறாக மைத்திரியின் மீதுள்ள பாசப்பிணைப்பினால் அல்ல.
அனைவரும் ஆட்சி மாறியிருக்கின்றது என்பதைப் பற்றியே கதைக்கின்றார்கள். ஆனால் இந்த ஆட்சி மாற்றம் வந்து இப்பொழுது இரண்டு மாதங்கள் முடிவடைகின்றது. இன்னும் எஞ்சியிருப்பது நாற்பது நாட்கள் மாத்திரம்தான்.
ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் மைத்திரிபால சிறிசேன, 100 நாட்கள் வேலைத்திட்டத்தை முன்வைத்திருந்தார். முடிவடைந்துள்ள 60 நாட்களில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு என்ன செய்திருக்கின்றார்? என்று கேட்டால் 'ஒன்றுமே இல்லை' என்றுதான் விடை வரும்.
புதிய ஆட்சி மாற்றத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உறுதுணையாக இருந்தது. இதன் காரணமாக புதிய அரசு சில விடயங்களை செய்ய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
நாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வடக்கு, கிழக்கு ஆளுநர்களை மாற்றியிருக்கின்றார்கள். வடக்கு முதலமைச்சின் செயலாளர் மாற்றப்பட்டிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் விளையாட்டு விழாக்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தவிர எந்த வேலைகளோ மாற்றங்களோ இடம்பெறவில்லை.
ஆனால், நாங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றோம். போராட்ட காலங்களில் வட, கிழக்கில் கைது செய்யப்பட்ட 500 சிறைக்கைதிகளில் ஒருவரையேனும் இதுவரை விடுதலை செய்யவில்லை.
இதுவொரு வேதனைக்குரிய விடயமாகும். மாறாக தமிழ்ப் பகுதிகளிலே இருந்து வெளிநாடு செல்கின்ற இளைஞர்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலே கைது செய்கின்ற நிலைமை தற்போதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. கடந்த ஆட்சியில் எவ்வாறு கைது செய்து கொடுமைப்படுத்தி அடைத்து வைத்தார்களோ அதுபோலவே தற்போதைய நிலைமையும் உள்ளது என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago