Kanagaraj / 2015 பெப்ரவரி 15 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீகிரியா ஓவியத்தின் மீது தனது பெயர் மற்றும் 10 அல்லது 12 எழுத்துக்களை அவர் எழுதியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைத்தொழிற்சாலையை சேர்ந்த ஊழியரான அந்த யுவதியை நீதவான் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சீகிரியாவுக்கு முதன் முறையாக வந்த அந்த யுவதி, ஓவியங்களை பார்த்தவுடன் அதன்மீது ஏற்பட்ட ஈர்ப்பினால் இவ்வாறு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 50 பேர் அடங்கிய குழுவுடன் சுற்றுலாவில் வருகைதந்த அந்த யுவதி, பாதுகாப்பு படையினர் நால்வர் இருக்கும் போதே இவ்வாறு எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுவதியின் இந்த செயற்பாட்டினால் ஓவியத்துடன் இருந்த பழைய கவிகளில் நான்கு நாசமடைந்துவிட்டதாக தொல்பொருளியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
15 minute ago
56 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
56 minute ago
6 hours ago