Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 15 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
'இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த கால யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கில் மாத்திரம் அண்ணளவாக 85,000 பெண்கள் தங்களது கணவர்மாரை இழந்துள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
'யுத்த காலத்தில் விதவைகளாக்கப்பட்டவர்களில் அதிகமானோர், மட்டக்களப்பு மாவட்டத்திலயே இருக்கின்றனர். அதிலும் இளம் வயதில் விதவைகளாக்கப்பட்டவர்களே அதிகமாகக் காணப்படுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டம், வறுமையில் 19.4 சதவீதமாகக் காணப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையில், இளம் விதவைகள் தங்களது வாழ்வாதாரத்துக்காக கடுமையாகப் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது' என்றும் அவர் கூறினார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு, காந்தி ஜீ இளைஞர் கழகம் நடத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு, கடந்த வெள்ளிக்கிழமை (13), புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கணவனை இழந்து இளம் பெண்கள், வறுமை காரணமாக பணிப்பெண்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை நாடிச் செல்கின்றனர். அவ்வாறு தங்களது குடும்ப கஸ்டத்தின் காரணமாக செல்லும் பெண்களில் பலர், அங்கு பாலியல் வன்முறைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். சிலர் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். இருப்பினும், தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு கடமையாற்றும் அவர்கள், இறுதியில் சவப்பெட்டிகளிலேயே நாடு திரும்பும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.
கடந்த 2006ஆம் ஆண்டு பிற்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள், மீண்டும் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டார்கள். ஆனால், அந்தக் குடியேற்றத்தின் பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டடோர் காணாமல் போயுள்ளனர். மேலும் சிலர் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் அதிகமானோர் இளம் குடும்பத் தலைவர்கள் என்றபடியால் அக்குடும்பத் தலைவிகள், வாழ்வாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் கே.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் மற்றும் இளைஞர் சேவைகள் மன்ற உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago