2025 மே 19, திங்கட்கிழமை

'இரத்தம் கொடுத்து உயிரைக் காக்க உதவுவோம்'

Princiya Dixci   / 2015 மார்ச் 22 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்றது.

'இரத்தம் கொடுத்து உயிரைக் காக்க உதவுவோம்' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த இரத்ததான நிகழ்வில் ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.அப்துல் ஹமீட் உட்பட அந்த அமைப்பின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இரத்ததானம் வழங்கினர்.

இந்த இரத்ததான நிகழ்வின் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு சுமார் 150 பைண்டு இரத்தம் சேகரிக்கப்பட்டதாக இரத்த வங்கிக்குப் பொறுப்பான வைத்தியர் கே.விவேக் தெரிவித்தார்.

சுமார் 32 பெண்களும் 118 ஆண்களும் இந்த இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டு தலா ஒரு பைண்டு இரத்தத்தை தானமாக வழங்கியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X