Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 22 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மத்திய கிழக்கு நாடுகளுக்கான வீட்டுப் பணிப்பெண் வேலைவாய்ப்பு மட்டக்களப்பு மாவட்டச் சிறுவர்களின் வாழ்வை சீரழித்துள்ளது என்று வாழைச்சேனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி எம்.எம்.எச்.நஜிமுதீன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சிப் பாடசாலையில் சிறுவர் பாதுகாப்பு டிப்ளோமா பயிற்சிநெறியை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'இயற்கை, செயற்கை இடர்களினால் மட்டக்களப்பு மாவட்டம் அவ்வப்போது பாதிப்புக்களை சந்தித்துவருகின்றது. கடந்தகால யுத்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் ஏற்பட்ட இழப்புக்களிலிருந்து அவர்கள் இன்னமும் முழுமையாக மீண்டெழவில்லை.
2004 இல் ஏற்பட்ட சுனாமி மற்றும் வருடாவருடம் ஏற்படும் அடை மழை பெருவெள்ளமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. இலகுவில் பாதிப்படையக்கூடிய சிறுவர்களும் பெண்களும் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளார்கள்.
பாதிக்;கப்பட்ட சிறுவர்களினதும் பெண்களினதும் தேவைகள், பாதுகாப்பு, பராமரிப்பு, அவர்களது நலன் என்பன இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலைமை இருந்துவருகின்றது.
தற்சமயம் சிறுவர்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்குள்ளாதலும் துஷ்பிரயோகமும் குறிப்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக தாய்மார் குழந்தைகளை கைவிட்டு மத்திய கிழக்குக்கு பணிப்பெண்களாகச் செல்வதால் சிறுவர்களின் வாழ்க்கை நிலைமை மிக மோசமாகன பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால், பல சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாகி கல்வியையும் இழந்துள்ளார்கள்.
இத்தகைய சிறுவர்களையும் பெண்களையும் மீட்டெடுத்து அவர்களது வாழ்வில் விமோசனத்தை பெற்றுக்கொடுக்க புதிய பயிற்சியாளர்கள் தமது அர்ப்பணிப்புடனான சேவையைச் செய்ய முன்வரவேண்டும்' என்றார்.
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுவர் பாதுகாப்பு டிப்ளோமா பயிற்சிநெறியில் 50 பயிலுநர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் முகாமைத்துவ உதவியாளர் தஸீலா பானு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .