2025 மே 19, திங்கட்கிழமை

வெவ்வேறு விபத்துக்கள்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 24 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,ஆர்.ஜெயஸ்ரீராம்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள வெவ்வேறு விபத்துக்களில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கோரகல்லிமடு கொழும்பு -மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ள  விபத்தில், சித்தாண்டி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த சின்னக்குட்டி காசிநாதன் (வயது 65) என்பவர் மரணமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.  

ஓட்டமாவடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த வான் மேற்படி முதியவரை மோதியதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது இவ்வாறிருக்க, ஏறாவூர் நகர பிரதான நெடுஞ்சாலையில்  இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ள விபத்தில், எம்.முஹம்மட் றியாஸ் (வயது 30) என்பவர் காயமடைந்துள்ள நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அக்கரைப்பற்றிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் பொலிஸார் கூறினர்.

அக்கரைப்பற்று டிப்போவுக்கு சொந்தமான தூரப்பயண பஸ் வண்டி,  ஏறாவூர் பிரதான வீதி நெடுஞ்சாலை நிறுத்துமிடத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பஸ்ஸை மீண்டும் செலுத்த முற்பட்டபோது, திடீரென முன்னால் வந்து மோட்டார் சைக்கிள் குறுக்கே பாய்ந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாக பஸ் சாரதி  பொலிஸ் முறைப்பாட்டில்  தெரிவித்தார்.

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ள விபத்தில் மாணவன் ஒருவன் காயமடைந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.  

மட்.  பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்தில் ஆண்டு 10 இல் கல்வி பயிலும் மாணவனே பாடசாலைக்கு செல்லும் வழியில் விபத்துக்குள்ளானான்.

தனியார் பேருந்துதானது  சைக்கிளில் வந்த மாணவனை மோதியுள்ளது. வாழைச்சேனை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த மாணவன்,  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.

இந்த நிலையில், பேருந்து சாரதி,  நடத்துநர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X