2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய வண்ணக்கர் பாம்பு தீண்டி மரணம்

Kanagaraj   / 2015 மார்ச் 25 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார், எஸ்.கார்த்திகேசு

உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய வண்ணக்கர் முத்துபண்டா சுரேந்திரராஜ்(வயது 35), நேற்று செவ்வாய்க்கிழமை (24) பாம்பு தீண்டி மரணமடைந்தார்.

பொத்துவில் ஊறனியில் அவருக்கு சொந்தமான ஹோட்டலில் வைத்து கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாம்பு கடிக்கு இலக்கான அவர், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோதும் சிகிச்சை பலனின்றி நேற்று(24) இரவு உயிரிழந்துள்ளார். 

கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது சர்வதேச தொண்டு நிறுவனங்களில் அம்பாறை,மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சமூக மேம்பாட்டு திட்டங்களின் அதிகாரியாக இவர் பணிபுரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரின் சடலம் பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் நாளை 26ஆம் திகதி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X