2025 மே 19, திங்கட்கிழமை

'கிழக்குக்கு, மோடி நிச்சயம் வருவார்'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 25 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

'இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தின்போது, கிழக்கு மாகாணத்துக்கும் விஜயம் செய்ய  அவர் ஆர்வமாக இருந்தார். இருப்பினும், அவரது நேரசூசியில் இறுக்கம் இருந்ததால், கிழக்கு மாகாணத்துக்கு அவரால்  விஜயம் செய்யமுடியவில்லை.  அடுத்தமுறை இலங்கைக்கு விஜயம் செய்தால்,  கிழக்கு மாகாணத்துக்கு நிச்சயம் தான் வருவதாக என்னிடம் இந்தியப் பிரதமர்  உறுதியளித்தார்' இவ்வாறு இலங்கைக்கான  இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி தொழில் ஊக்குவிப்பு மையத்தில் (சேவா) தொழிற்பயிற்சிகளை பூர்த்திசெய்த 25 பெண்களுக்கு  சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர்; இந்த நாட்டின்  பல்வேறு அபிவிருத்திகளுக்காக 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்திய அரசாங்கம் செலவு செய்துள்ளது.

இந்தத் திட்டங்களில் மிக முக்கியமானதொரு திட்டம் வீடமைப்பு திட்டமாகும். வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பகுதிகளில் ஐம்பதாயிரம் வீட்டுத்திட்டங்களை இந்தியாவின் உதவியுடன் மேற்கொண்டுவருகின்றோம். இந்த நிலையில், எதிர்காலத்திலும் இந்தியா  இவ்வாறான திட்டங்களுக்கு உதவிகளை வழங்கும் என்பதை இங்கு உறுதிபடக்  கூறிக்கொள்ள  விரும்புகின்றேன்' என்றார்.

இந்த நிகழ்வில்; மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட தொழில் ஊக்குவிப்பு மையத்தின் அதிகாரிகள் மற்றும் தொழிற்பயிற்சிகளை பூர்த்திசெய்த  பெண்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X